Monday, January 25, 2010

மலர்கள்


மலர்களின் பால் எல்லோருக்கும் ஒரு மயக்கம் உண்டு.

வகைகளில் தான் வேறுபாடு.

ஊட்டியில் மலர் கண்காட்சியில் அபூர்வ மலர்கள் பலவற்றை காண நேர்ந்தது.

ஒவ்வொரு ஊரிலும் சில தனித்த மலர்கள் உண்டு என்று தம்பி முத்துக் குமரன் சொல்லியிருக்கிறார்.

நானும் பல இடங்களில் இதனை பார்த்திருக்கிறேன்.

சில மலர்களுக்கு ஊருக்கு ஊர் வேறு வேறு பெயர்கள் உண்டு.

குறிஞ்சி பாட்டில் "வள்ளிதழ் ஒண்சென்கான்தலில் " தொடங்கி "வேங்கை" வரை எதனை மலர்கள் சுட்டிக் காட்டப் பட்டுள்ளன.

தம்பி



thambi - Raghul Gadadharan

கேமரா


புகைப்படத்தின் பால் ஒரு ஆர்வம் என்று தோன்றியது என்பது நினைவில்லை .

முதல் முதலாக சீனிராஜ் புஸ்பராஜ் வீட்டில் எடுத்த புகைப்படமே முதலாவதாகும் என நினைக்கிறேன்.

பக்கத்துக்கு வீட்டு கண்ணனின் கேமராவை அகலக் கண் கொண்டு பார்த்தது நினைவில் உள்ளது.

தஞ்சை ராஜாமடம் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் ஒரு முழு ரோல் படம் எடுத்து எதுவும் சரியாக வரவில்லை.

பின்பு அவ்வப்போது வெளியூர் செல்லும் போது ஓசியில் வாங்கிய கேமராக்கள் சிலவற்றை கற்றுக் கொடுத்தன.

புகைப்படம் எடுப்பதை ஒரு கலையாக நினைக்க ஆரம்பித்த போது நிச்சயமாக ஒரு கேமரா சொந்தமாக வேண்டும் என்பது தெரிந்தது.

ஆனால் புதிய கேமரா வாங்க வேண்டும் என்பது இன்று வரை கனவாகவே உள்ளது.

இணையத்தில் உலவும் போது புதிய வரவுகள் பற்றி அடிக்கடி அறிவை அப் டேட் செய்து கொண்டிருந்தாலும், கேமரா வாங்குவது இன்னும் கனவாகவே உள்ளது.

இன்னும் ஆறு மதத்தில் ஒரு கேமரா வாங்க வேண்டும்.