கடந்த ஆறாம் தேதி (06.06.2010) அன்று நெடுங்குளம் சென்று விட்டு திரும்பியபோது என் தங்கையின் காரில் செம்பட்டி வரை வந்து திண்டுக்கல் வழியாக திருச்சி வந்தேன். திண்டுக்கல்லில் இறங்கியவுடன் முன்பு நான் படித்த பள்ளியை பார்த்துவர எண்ணினேன். 1985 - 87 ஆண்டுகளில் MSP சோலை நாடார் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளில் படித்தேன்.
அரசு போது மருத்துவமனையை ஒட்டிய சாலையில் நடந்தேன். இடதுபுறம் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் இருந்தது. கோபால சமுத்திரம் என்ற குளம் ஒன்று முன்பு அங்கே இருந்தது. அதன் கரையில் தற்போது கட்டிடங்கள் உள்ளன. நான் இருந்த வேளையில் திண்டுக்கல்லில் கடுமையான தண்ணீர் பஞ்சம் இருந்தது. கோபால சமுத்திரத்தை திறந்த வெளி கழிப்பிடமாக உபயோகிப்பவர்கள் இரண்டு கோலி சோடா பாட்டில்களை கொன்று சென்று சுத்தம் செய்வார்கள் என்று சொல்வார்கள். நான் ஒருபோதும் முயன்றதில்லை.
பழனி செல்லும் பிரதான சாலையை அடைந்து, அதனை கடந்து நேரே சென்றால் இடது புறம் வரிசையாக மூன்று தெருக்கள் வரும். நாயக்கர் புது தெரு ஒன்று , இரண்டு, மூன்று. மூன்றாவது தெருவில் திரும்பி நேரே சென்று தெருவின் இறுதிக்கு முன்பாக வலது புறம் திரும்பினால் சிறிய தெரு வரும். பின்பு மீண்டும் ஒரு இடது திருப்பம். கோவிந்தாபுரம் கிழக்கு என்பது அதுதான். இலக்கம் 87 - E இல் அடங்கிய இரண்டு வீடுகளில் ஒன்றில் இருந்தோம். மிகுந்த பாசமும், தேவையான கண்டிப்பும் நிறைந்த அண்ணனும், எனக்கு இன்றளவும் தாய்க்குத் தாயை போன்ற அண்ணியும், இருந்த அந்த வீட்டை 25 ஆண்டுகள் கழித்து பார்க்கிறேன். பெரிய அளவில் மாற்றங்கள் ஏதும் முன்புறம் இல்லை. வலதுபுறம் இருந்த வெற்றிடத்தில் மாடி படிகள் கட்டி மாடியில் குடியிருப்பு வீடுகள் கட்டப் பட்டிருந்தன. வெளியில் இருந்த திண்ணையில் நான்கு சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். பழைய நண்பர்களை நினைவுக்குக் கொண்டுவருகிறான்.
அரவிந்த்
செழியன்
டாக்டர் சுபாஷ்
அனிதா
பிங்கி
சுப்ரமணியன்
ஜுனைதா
யாஸ்மின்
சமீரா
ராஜ்
ஜெயகாந்தன்
சரவணன்
ஜெய்சங்கர்
சிவகாமி
கொஞ்சம் யோசித்தால் இன்னும் சில பெயர்கள் நினைவுக்கு வரலாம். அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களுக்கு பத்துக்கும் குறைவான வயதே இருக்கும் என்பதால் அவர்களிடம் விவரங்கள் கேட்பது பயனற்றது . தெருவின் முடிவில் SL என்ற பெயரில் சுப்பையா என்பவர் ஒரு சைக்கிள் கடை வைத்திருந்தார். உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற போது ஆடு சின்னத்தில் கவுன்சிலர் பதவிக்கு நின்று தோல்வியடைந்தார். முடிவுகள் அறிவிக்கப்பட்ட அன்று இரவு குடி போதையில் உங்களை சின்னமாக வைத்ததனால் தான் நான் தோற்றுப்போனேன் என்று அவரது ஆடுகளை எல்லாம் அடித்து துரத்தி விட்டார். ஆனால் அவர் நல்ல வேலைக்காரர். ஒரு முறை சைக்கிள் ரிப்பேர் செய்தால் பழுதுகள் அடிக்கடி வருவதில்லை. தெரு கோடியில் வலது புறம் திரும்பினால் ரிக்சா நிறுத்தம். எப்போதும் மூன்று ரிக்ஸாவுக்குக் குறையாமல் நின்று கொண்டிருக்கும். அவர்களில் பலபேர் எனக்கு பழக்க மாணவர்கள் அந்த நாளில். அப்போதெல்லாம் கோவிதாபுரத்திலிருந்து அரசு மருத்துவமனைக்கு ரிக்ஷாவில் செல்ல கட்டணம் மூன்று ரூபாய்தான். நம்ப முடிகிறதா ?
இப்போது பல கடைகள் அந்த இடத்தில இருந்தன. பழைய நபர்களைப் பற்றி யாரிடம் விவரம் கேட்பது. பலபேரின் முகங்கள் பழகியதைப்போல் இருந்தன. இது வெறும் பிரம்மைதான் என்று உணர்ந்தேன். அந்த கடையில் ஒரு தேநீர் குடித்துவிட்டு தெரு கடைசி வரை சென்று திரும்பினேன். என்றோ ஒரு நாளில் எனது காலடிகள் சுற்றி திரிந்த இடங்கள் தானே இவைகள் ? எதனை முறை குறுக்கும் நெடுக்குமாக எந்த தெருக்களில் சுற்றி இருக்கிறேன். எங்கோ ஒரு அடித்தளத்தில் பல ஆயிரம் காலடி தளங்களுக்கு கீ ...............................கீழே .. எனது காலடித் தடங்களும் படிந்து போய் அரூபமாக இருக்கின்றன. இதைப்போல் இன்னொருவன் ஒரு தேடலில் வரும்போது, அவனின் காலடிகளுக்கு கீழே தான் எனது காலடிகள் இருக்கும்.
நினைவுகள் வினாக் குறிகளாக மாறி என் உடலில் அனைத்து பாகங்களிலும் முட்களாக தைத்து ஒருவித சோர்வை உருவாக்கின. சுமார் ஆறு முறை இரண்டு தெருக்களிலும் சுற்றி சுற்றி நடந்தேன். விவரங்கள் கேட்க யாரும் தென்படவில்லை. கிரிக்கெட் விளையாடிய இடங்கள் வெறுமையாக இருந்தன.
பள்ளியை நோக்கி நடக்கத் துவங்கினேன். நாயக்கர் புது தெரு மூன்றின் வழியே தொடர்ந்து நடந்தால் பாண்டியன் நகர் கான்டீன் வரும். அதிலிருந்து சாலையை குறுக்கே கடந்து உள்ளே நுழைந்து சென்றால் பள்ளியை ஒட்டிய சாலையை அடையலாம். ஆனால் அந்த குறுக்கு வழிகள் எவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு இன்னும் அப்படியே இருக்கும் என்று சொல்ல முடியுமா ? விளை நிலங்கள் அனைத்துமே வீடுகளாகிவிட்ட நிலையில் நகரில் உள்ள பகுதிகளைப் பற்றி ஒரு முடிவுக்கு வர முடியாது. எதற்கும் நேர் வழியிலேயே செல்வது உத்தமம் என்று சாலை வழியே நடக்கத் துவங்கினேன். பள்ளியை சுற்றிலும் நெறைய மாற்றங்கள். பள்ளிக்கு எதிரே இருந்த சிறு சிறு கடைகள் பெரிய கட்டிடங்களாக மாறி இருந்தன. உள்ளே சென்றேன். உட்புறத்திலும் வெகுவான மாற்றங்கள். ஒன்பதாவது வகுப்பறைகள் எல்லாம் விடுதி மாணவர்களின் தங்குமிடங்களாக மாறி இருந்தன. மிக மிக நிதானமாக பள்ளியின் அனைத்து பகுதிகளையும் சுற்றி வந்தேன். நினைவுகள் அலை அலையாக வந்து தாகிய வண்ணம் இருந்தன. ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு நிகழ்வு மனதில் வந்து போனது. எனக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்கள் எல்லாரும் பணி ஓய்வு பெற்றிருந்தார்கள். பிச்சைமணி சார் சென்ற ஆண்டு தான் ஓய்வு பெற்றார் என்று அங்கிருந்த வார்டன் சொன்னார். பின் அவரை அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். உடனே பள்ளிக்கு வருவதாக கூறினார். அவர் வந்தவுடன் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றேன். வெங்கிடசாமி ஆசிரியரின் வீட்டிற்க்குச் சென்று அவரையும் பார்த்தேன். சுமார் அரை மணி நேரம் பழைய நினைவுகளில் கழிந்தது.
அடுத்த முறை எனது மகனையும் அழைத்து வந்து நான் பயின்ற பள்ளியை காட்ட வேண்டும் என்ற உறுதியுடன் நடந்தே பேருந்து நிலையம் வந்தேன்.
நான் படித்த வேளையில் எனது வகுப்பு தோழர்களை நினைவுக்குக்கொண்டு வரும் முயற்சியில் இறங்கினேன்.
முருகேசன்
குழந்தைகுமார்
பொன்னருவி புரவலன்
ஆல்பர்ட் ஜான்
ராமன்
லக்ஷ்மணன்
சுரேஷ்
ராபர்ட் எட்வின்
ரவி
செல்வகுமார்
ஞானசேகர்
தாய் முத்து செல்வன்
கொளஞ்சி
ஜெபக்குமார்
மகேந்திரன்
முத்துக்குமரன்
காண்டீபன்
சதீஷ்குமார்
பல பேரின் முகங்கள் நினைவிருதாலும் பெயர்கள் மறந்து விட்டன.