Sunday, September 18, 2011

Madurai P. Azhagu


" அய்யா களிமங்கலம் பஸ்சு வந்துருச்சு . ஏறுங்க ஏறுங்க".

"அழகர் கோயில் பஸ்சு நாப்பத்தி நாலு எங்கே வராது. இப்ப இடம் மாதிட்டாக . இதே லயனல கடைசியில போங்க "

"சோழவந்தானுக்கு இன்னும் பாத்து நிமிஷத்துல பஸ்சு வரும். இப்படி கட்டையிலே உக்காருங்க. நம்ம டீ ஒன்னு சாப்பிடுங்க "

                - மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் காலை ஐந்து மணிக்கு வருபவர்களைஎல்லாம் வரவேற்பவர் பி. அழகு. டீ சுமார்தான் என்று சொல்பவர்களுக்கும் ஒரு பதில் வைத்திருக்கிறார். 

" அண்ணே கலையிலே சூடா உள்ள தள்ளுங்க. அது போதும். கொஞ்சம் முன்னே பின்னே தான் இருக்கும். நானும் நாலு காசு லாபம் பக்க வேணாமா ? "

டீ அவர் சொன்னது போல் முன்னே பின்னே இருந்தாலும், அவர் மனது போல் சுவையாகவே உள்ளது.
அது சரி , பஸ் ஸ்டான்டுக்குள்ளே டீ கடை போட விடமாட்டங்களே ?
" நம்ம கொஞ்சம் கரெக்டான ஆளு. இல்லேயினா போலிசு விடுவாங்களா ?"

சிறிது நேரத்தில் ஆறு ஏழு பேர்  வந்தார்கள். " அய்யா அப்பிடியே இப்பிடி நோட்டங்கை பக்கமா வந்து அந்த பெஞ்சில உக்காருங்க. சூடா டீ  தாரேன் " என்று வந்தவர்களின் கேள்வியை எதிர்பாராமல் அவர்களை தமது வலையில் வீழ்த்துகிறார்.

"இன்னும் செத்த நேரத்தில வந்துருவான் உங்க பஸ்சு. ஒரு பேப்பர வாங்கீட்டு வந்து ஒரு டீய குடிச்சுக்கிட்டு அப்பிடியும் இப்பிடியுமா ரெண்டு வாக்கிங் போங்க. "

மிகவும் சுவையான ஒரு மனிதர் அழகு. அடுத்தமுறை மதுரை பெரியார் நிலையத்தில் பாருங்கள்.