Tuesday, June 30, 2009

முதலை


நீரில் மிக ஆபத்தான விலங்காக முதலை கருதப் படுகிறது. நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது பெங்களூருக்கு சென்றபோது ஒரு பறவைகள் சரணாலயத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே படகு சவாரியும் செய்தோம். படகு சிறியதாக இருந்தது. துடுப்பு வலிப்பவர் பத்துப் பேருக்குமேல் ஏறக் கூடாது என்று தடுத்தும் கேட்காமல் ஐந்து பேர் ஏறினோம். யாராவது உள்ளே விழுந்து விட்டால் தான் தண்ணீரில் குதித்து காப்பாற்றுவதாக இரண்டு பேர் அறிவித்தார்கள். ஆனால் இருவரின் சாயமும் அடுத்த நிமிடமே வெளுத்து விட்டது. நீரின் நடுவே இருந்த பாறையில் இரண்டு முதலைகள் வாயை அகல திறந்து கொண்டு இருந்தன. வீரர்கள் இருவரும் உடனே தங்களின் அறிவிப்பை திரும்ப பெற்றனர். ஆனால் படகோட்டியோ அவை ஒன்றும் செய்யது என்றும் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் சொன்னார். ஆனாலும் பயம் தெளிய வில்லை. விளம்பர பலகையை பாருங்கள். பயம் வருகிறதா ?

Friday, June 26, 2009

புத்தக வாசிப்பு




புத்தக வாசிப்பு என் சிறு வயது பழக்கம். என் தந்தை என் நன்றிக்கு உரியவர். அவர்தான் எனக்கு புத்தகங்களை அறிமுகப்படுத்தியவர். எங்கள் வீட்டில் என் தந்தையால் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் புத்தக பொக்கிஷமே அவர் எனக்களித்திருக்கும் பெரிய சொத்தாகும். நூலகத்தை ஒழுங்கு படுத்த வேண்டும் என்ற நெடுநாள் முயற்சிதான் முடியாததாகவே இருக்கிறது. ஒளி ஊடகங்களின் அபரிமித வளர்ச்சியும் தொலைக்காட்சி மக்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்துவிட்டிருப்பதும் புத்தக வாசிப்பை சிறிதும் பாதிக்கவில்லை என்பதே உண்மை. புத்தகம் ஒரு நல்ல நண்பன். கி. ராஜநாராயணன் கதைகளை இரவில் படிப்பது ஒரு அனுபவம். உங்களுக்கு ஏதேனும் அனுபவம் உள்ளதா ?
அதிலும் பின்னிரவின் இருட்டில் அனைவரும் உறங்கிவிட்ட வேளையில், சென்னை வானொலியில் " இரவின் மடியில் " என்ற பாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். அருமையான பழைய பாடல்கள் இனிமையாக ஒலித்துக்கொண்டிருக்கும். அந்த மெல்லிய சத்தத்தின் பின்னணியில், இரவு விளக்கொளியில் புத்தகம் படிப்பது எனக்கு பிடித்த நிகழ்வு.

Thursday, June 25, 2009

விளம்பரம்


சமீபத்தில் மாருதி குறித்த விளம்பரம் ஒன்று தொலைக்காட்ச்சியில் பார்த்தேன். ஒரு குழந்தை அழுது கொண்டிருக்கிறது . ஒவ்வொருவராய் அதை மாற்றி மாற்றி வாங்கி கொஞ்சுகிறார்கள். அழுகை நிற்கவில்லை. விளையாட்டுக் காட்டுகிறார்கள். அழுகை நிற்கவில்லை . இப்படியே கை மாறி கை மாறி அம்மாவிடம் வந்ததும் அழுகை சட்டென்று நின்று விடுகிறது. மாருதி வாகனங்களை மாருதி செண்டேரிலேயே சர்வீஸ் செய்யுங்கள் என விளம்பரம் முடிகிறது. இது நல்ல கற்பனை மற்றும் சரியான தகவல் அல்லவா?

இதை பாருங்கள்











இந்த புகைப்படங்கள் ராணுவ வீரர்களின் குடும்பங்களின் நிலையை பிரதிபலிக்கின்றன . ஒவ்வொரு வார்த்தைக்கும் அவர்களின் வாழ்வில் உள்ள அர்த்தங்களை நோக்கும்போது மனம் வலிக்கத்தான் செய்கிறது.
வரிசை படி
௧.காதல்
௨.வேதனை
௩. விடை பெறுதல்
௪.வலி

இந்த புகை படங்களை தந்த ப்ரீ ஒப்பன்டைரியின் வில்லி & வில்மா வுக்கு என் நன்றிகள்.

Wednesday, June 24, 2009

குழந்தைகள்


குழந்தைகளின் உலகம் மிகவும் நுட்பமும் அழமும் உடையது. எவ்வளவு முயன்றாலும் நம்மால் புரிந்து கொள்ள முடியாதது. அவர்களின் எண்ணங்கள் மற்றும் செயல்களை நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது. அதே போல் பெரியவர்களின் உலகம் குழந்தைகளுக்கு புரிவதில்லை. ஆனால் அதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. நினைத்து பார்த்தால் நமக்கு கவலைப்படுவதிலேயே நேரம் கழிந்து விடுவது புலனாகும். ஆனால் குழந்தைகளுக்கு ஆனந்தப்படுவதற்கே நேரம் போதவில்லை. ஆறு மதங்கள் வரை குழந்தைக்கு யாரையும் அடையாளம் தெரியாது என்று சொல்கிறார்கள்( அம்மாவைத்தவிர). ஆனால் பல குழந்தைகள் பலரையும் அடையாளம் கண்டுகொள்கிறார்கள். எனது குழந்தை கீழ்கண்டவர்களை அடையாளம் கண்டு கொள்கிறான்.

௧. கீழ் வீட்டு மஞ்சு.

௨.மஞ்சுவின் கார்.

௩.பக்கத்து வீட்டு வெள்ளை நாய்.

௪.துணி துவைக்க ஊற வைக்கும் சிவப்பு பிளாஸ்டிக் பாத்திரம்.

௫.மாடியில் கட்டப் பட்டுள்ள கொடிகள்.

௬. பால்கார பையன்.

௭. தீபிகா

௮. தீபக்

௯. பாலசிங்கம்

௧0.கபி

௧௧. சூர்யா

௧௨.பாரதி

௧௩. தரைவிரிப்பு கலர்

௧௪.சுவரில் ஒட்டியிருக்கும் புலி, மான் படங்கள்.

௧௫. டிவி ரிமோட்

௧௬. தண்ணீர் வைக்கும் மண் பாத்திரம்.

௧௭. அவருக்காக வாங்கப்பட்டு உடைந்து போயுள்ள பொம்மைகள்.

பட்டியல் இன்னும் நீள்கிறது. ஆனால் மின் துண்டிப்பு இந்த பதிவுக்கு தற்காலிக தடை போட்டுவிட்டது. நன்றி.

Monday, June 22, 2009

திருக்குறள்


திருக்குறள் உலகபொதுமறை என்று அழைக்கப்படுகிறது. ஆதனால் தானோ என்னவோ அதற்கு என்றும் பல்வேறு நபர்களால் பதவுரை, தெளிவுரை என்று இன்று வரை தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது. பல்வேறு பதிப்பகங்கள் இவ்வாறு அவற்றை பதிப்பிததுக்கொண்டே இருக்கிறார்கள். அவை ஓரளவுக்கு விற்பனையும் ஆகிறது. ஆனால் பல்வேறு பதிப்பகங்களின் வெளியீடுகளில் தவறுகள் மலிந்து காணப்படுகின்றன. பதிப்பகதாரோ அல்லது எழுதியவரோ அதை பற்றி கவலைப்படுவதில்லை. ஒவ்வொரு முறையும் " இந்த பதிப்பு வித்தியாசமானது " என்று கூறுகிறார்கள். ஆனால் அது ஒவ்வொரு முறையும் காதல் படம் எடுக்கும் இயக்குனர்கள் சொல்லும் " இது ஒரு வித்தியாசமான காதல் கதை என்ற வசனம் தன் மனதில் தோன்றுகிறது. திருக்குறளை யாரும் செழுமைப்படுத்த வேண்டாம். அப்படியே விட்டுவிடலாமே. வேண்டியோர் வேண்டுவதை அதில் தேடி எடுத்துக்கொள்ளட்டுமே !.

Friday, June 19, 2009

வினாக்கள்


கீழ்க்கண்ட இரண்டில் எது அதிகமானது என்று ஒருநிமிடம் யோசிப்போமா ?


  • நம்மால் தொடுக்கப்பட்ட வினாக்கள் .

  • நாம் தொடுத்த வினாக்கள்.

இதையே மேலும் பகுக்கலாம். பதில் கிடைத்தவை , கிடைக்காதவை என்று. நாம் ஒவ்வொருவரும் கணக்கற்ற வினாக்களை எதிர் கொள்கிறோம். ஆனால் விடையைப் பற்றிய விவரங்கள் பல வினாக்களுக்கு நம்மிடம் இல்லை. விடை வராது என்று தெரிந்தே கேட்கப்பட்டவை அவற்றில் அதிகம். நாம் பதில் சொல்லாமல் விட்டு விட்ட வினாக்களும் அதிகம். ஏன் ஒவ்வொருவரும் அவரவர் வலிஎங்கும் வினாக்களை விதைத்துவிட்டு செல்கிறோம்? ஒவ்வொருவரும் கண்ணுக்குத் தெரியாத வினாக்களின் வளை கொக்கியில் மாட்டிக்கொண்டு தவிக்கிறோம். விடை கிடைக்காத வரை எந்த வினாவும் அழிவதில்லை. ஒவ்வொருவர் விடுத்த விடை கிடைக்காத வினவும் ஓய்வின்றி அடுத்தவர் பாதையில் ஓசையின்றி தடை செய்கின்றன. தமக்கான விடையை அவை எதிர்படும் ஒவ்வொருவரிடமும் தேடுகின்றன.


நீங்கள் கவனமாக கணக்கிட்டுப் பார்த்தல் உங்களால் விடுக்கப்பட்ட வினாக்களில் பெரும்பலானவைகளுக்கு உரிய பதில்கள் உங்களிடமே உள்ளன. மேலும் பல வினாக்களுக்கு உங்களால் மட்டுமே பதிலளிக்க முடியும். பலவற்றிற்கு யாராலுமே பதிலளிக்க முடியாது. பின்பும் ஏன் நாம் தொடர்ந்து தேவையற்ற கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கிறோம் ?








பூக்கள்


பூக்கள் நமது சிந்தனையை எப்போதும் மலர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகின்றன. சிறு வயதிலிருந்தே எனக்கு மலர்கள் மேல் ஒரு பற்று இருந்து வந்தது. பெயர் தெரியாத அல்லது இப்போது மறந்து விட்ட பல மலர்கள் என் மனதில் மங்கலாக தோன்றுகின்றன. சிவப்பு நிறத்தில் மாலை நேரத்தில் பூக்கும் ஒரு மலரின் பெயர் என்று வரை எனக்கு தெரியாது. ஆனால் நாலரைமணிப்பூ என்று அதை அழைப்போம். ஒவ்வொரு நாளும் நாலரை மணிக்கு அது பூப்பதால் அந்தப்பெயரிலேயே அது அழைக்கப்பட்டது.
இப்போதும் பல மலர்கள் பெயர் தெரியாமலேயே நம்மால் கடக்கப்படுகின்றன. அனால் நமது மனதுக்கு மகிழ்ச்சியை அளிப்பதில் மட்டும் அவை தவறுவதில்லை.


Friday, June 12, 2009

தமிழில் முதல் பதிவு


எனக்கு தமிழில் பதிவுகள் செய்ய வேண்டும் என்று நீண்ட காலமாகவே எண்ணம் இருந்து வந்தது . அது இன்று தான் நிறைவேறியது . நன்றி. நான் தொடர்ந்து எழுதுவேன்.

First Entry


Actually i started this blog to write my thoughts in Tamil. Let me do it soon..
Pl. see this photo and post your observations..