Sunday, February 21, 2010

மக்கள் தொகை


கருக்கலைப்பு - இது ஒரு சொல்லத்தகாத சொல்லாகவும், ரகசியமாக மறைமுகமாக மட்டுமே பயன் படுத்தத் தக்கதாகவும் இருந்து வந்தது. அமெரிக்காவில் வயதுக்கு வந்த மகள் வெளியே செல்லும் பொது " மறக்காமல் காண்டம் எடுத்துக் கொண்டாயா ?" என்று தாய் மார்கள் கேட்பது வழக்கம் என்று கேள்விப்பட்டு அந்த வகை நாகரீகத்தின் வளர்ச்சி பல அதிர்வுகளை ஏற்படுதியதுண்டு.

எண்பதுகளில் குடும்ப கட்டுப் பாடு சிகிச்சை எளிமை படுத்தப்பட்டு அதனை எய்துவதற்கு குறியீடு நிர்ணயிக்கப் பட்ட பின்னர் பிறப்பை குறைப்பது மக்கள் தொகையை கட்டுப் படுத்தும் ஒரு காரணியாக கருதப் பட்டது. மேலும் குழந்தைகளுக்கிடையே போதிய இடைவெளி இருப்பது அவசியம் என்றும், திருமணமான உடன் குழந்தை பெறுவது அவசியமில்லை என்றும் சில சொல்லாடல்கள் முன்வைக்கப் பட்டன. அவற்றில் பெரும்பாலானவை ஏற்றுக் கொள்ளப் பட்டன.

அரசாங்கமும் அதன் வழியில் ஊடகங்களின் வாயிலாக விளம்பரங்களும், ஆங்காங்கே சுவர் விளம்பரங்களும் செய்து உரிய செய்தி அணைத்து மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதில் பெரும் கவனம் எடுத்துக் கொண்டது. திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் சுமார் அறுநூற்றைம்பது கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப் பட்டது என்று காலை ஆறு முப்பது மாநில செய்திகளில் வசித்தார்கள். எனினும் ஒரே நாளில் செய்யப்பட்ட உலக சாதனையை விட இந்த எண்ணிக்கை சற்றே குறைவானது என்றும் தெரிவிக்கப் பட்டது.

" முதல் குழந்தையை தாமத படுத்துங்கள்"

" இரண்டாவது குழந்தைக்கு இடைவெளி தாருங்கள்"

" மூன்றாவது குழந்தையுடன் முற்றுபுள்ளி வையுங்கள்"

இது அந்த காலத்தின் அரசு வேண்டுகோள்.

இதுவே பின்பு காலத்தின் கட்டாயமாக

" நாம் இருவர் நமக்கு இருவர் " என்று மாறியது.

" இரண்டே பெறுக இனிதே வாழ்க" என்பது இன்னொரு ஸ்லோகன் .

படிப்படியாக மாறி இதுவே,

" ஒன்றே பெறுக, ஒளிமயமாக வாழ்க " என்று ஆனது.

இதை விட குறைவான திட்டமிடல் இருக்க இயலாது என்ற நிலையில் அறைகூவல்கள் இத்துடன் நின்று விட்டது.

" நாமே இருவர் , நமக்கேன் இன்னொருவர் " என்ற ஸ்லோகன் வரும் வரும் என்று எதிர் பார்த்து இன்று வரை வரவில்லை.

இந்திய துணை கண்டத்தின் பலமே எங்கும் வியாபித்திருக்கும் மக்கள் மக்கள் மக்கள் திரளே ஆகும் .

Friday, February 19, 2010

வீடு மாற்றுதல்



வீடு மாற்றுதல் என்ற நிகழ்வு கடந்த பாத்து ஆண்டுகளாக இல்லை. நண்பர்களுடன் தங்கியிருந்த அறையே வீடாக மாறியதால் அதிலேயே வசிப்பிடம் தொடர்கிறது. ஆனால் திடீரென்று வாடகை மூன்று முறை அதிகரிக்கப் பட்டது. மூன்றாவது முறை மிக அதிகமாக ஏற்றப் பட்டதால், அதே வீட்டின் பின்புறத்திற்கு மாறிவிட விருப்பம் தெரிவித்து அதன்படி நேற்று பால் காய்ச்சி புதிய வீடிற்கு குடி புகுந்தாகி விட்டது.


பொருளாதார பற்றாக் குறையே வீடு மாறுதலுக்கு முதல் காரணமாகும். மேலும் அக்கம் பக்கமுள்ளவர்களும் இரண்டு பேருக்கு இந்த வீடு அதிகம் என்று பல முறை சொல்லி விட்டார்கள் என்பதும் என் மனைவியின் வாதம். புதிய வீடு முந்தைய வீட்டின் அளவில் சரி பாதியளவே ஆகும். ஆனாலும் போதுமானதாகவே இருக்கிறது. புத்தகங்களை அடுக்குவது தவிர வேறு ஒன்றும் சிரமங்கள் இல்லை. ஆயிரம் ருபாய் சேமிப்பும் வங்கி கடனை செலுத்த உதவும்.


முதல் முதலாக தேவகோட்டை செப்பவயலார் தெருவில் இரண்டு மூன்று வீடுகளில் மேரி மேரி இருந்தது நினைவில் உள்ளது. அண்ணாமலை அய்யா வீடு, அன்னபூரணி ஆச்சி வீடு, இன்னொரு வீடு.


சந்திரசேகர் மற்றும் பாப்பு ஆகியோர் பக்கத்துக்கு வீட்டில் இருந்த என் வயதுள்ள குழந்தைகள். அங்கிருந்து வீரபண்டியபுரம் நடுதெருவுக்கு வீடு மாற்றம் செய்யப் பட்டது. பின்பு, தேவி பவனம். இப்போது மின் வாரிய சாலை.


பெரம்பலூரில் ரூம் ரூமாக மாறியதில் நினைவுகள் ஒன்றும் இல்லை.

Monday, February 15, 2010

MY WORLD

MY WORLD - BBC - short film contest

interested can follow th link.


Thursday, February 11, 2010

இந்திய கிரிக்கெட் அணி


இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் அணிகளின் தர வரிசையில் முதலிடத்தை பிடித்தது. அதன் பின்னர் வங்காள தேசத்திற்கு சென்று வெற்றியை பெற்றது. தற்போது தென் ஆபிரிக்க அணியை எதிர் கொள்கிறது.

இரு அணிகளும் மிக குறைந்த புள்ளிகளின் வித்தியாசத்திலேயே தொடர்ந்து வருவதால் இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் இரு அணிகளுக்கும் மிக மிக முக்கியமான வை. இதில் முதல் போட்டியில் தன் ஆப்பிரிக்க அணி இன்னிங்க்ஸ் வெற்றி பெற்று விட்டது. அடுத்த டெஸ்ட் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

டிராவிட் , லக்ஸ்மன், யுவராஜ் போன்ற முன்னணி வீரர்களின் காயம் இந்திய அணியின் தோல்விக்கு கூடுதல் காரணமாக அமைந்து விட்டது.

ஸ்டெய்னின் துல்லியமான பந்துவீச்சில் இந்திய அணி ஏறக்குறைய சுருண்டு விட்டது என்றே சொல்லலாம். புதிய பந்தில் றிவேர்ஸ்ஸ்விங் செய்வதில் அவர் வல்லவராகவும், நல்ல லென்க்தில் தொடர்ந்து பந்து வீசுபவராகவும் முன்னேறி வருகிறார். இந்திய அணியை இந்திய மண்ணில் அதுவும் இன்னிங்க்ஸ் வெற்றி கொள்வது என்பது சாதாரண சாதனை அல்ல.

இரண்டாவது டெஸ்டில் கவனமுடன் விளையாட இந்திய அணி முயல வேண்டும்

Tuesday, February 9, 2010

கடிதம்


கடிதம் எழுதுதல் என்ற கலை இணையம் மற்றும் கை பேசியால் மறக்கடிக்கப் படக் கூடிய சூழல் உருவாகியுள்ளது.

முன்பெல்லாம் சில பையன்கள் விடுதியில் தங்கி படிப்பார்கள். வீட்டிலிருந்து வரும் கடிதத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் சுகத்தை அவர்கள் அபரிமிதமாக அனுபவித்து விட்டவர்கள்.

நானும் வேறொரு ஊரில் தங்கி படித்த போதுஅடிக்கடி கடிதங்கள் எழுதுவேன்.

கண்ணன்

சிவா

அப்பா & அம்மா

சுபாஷ்

சரவணன்

போன்றவர்களுடன் தொடர்ந்த கடித தொடர்பு இருந்தது.

என் அப்பாவின் கடிதங்களில் பெரிய பட்டயடிக்கும் முனை கொண்ட பேனாவினால் கருப்பு மையினால் சீரான இடைவெளி விட்டு எழுதப் பட்ட குண்டு குண்டு எழுத்துக் களைக்கொண்ட வரிகள் பாசத்தையும் அன்பையும் பொழிந்து தள்ளியிருக்கும்.

என் நண்பர்களின் கடிதங்களை வரிசை படுத்தி தனியாக நீண்ட காலம் வைத்திருந்தேன். இரண்டு முறை வீடு மாற்றிய போது பல கடித கற்றைகள் இடம் மாறி தொலைந்து விட்டன. இருப்பினும் பல கடிதங்கள் இன்னும் என்னிடம் பத்திரமாக உள்ளன.

பல முறை ஓய்வாக இருக்கும் போது அவற்றில் பலவற்றை எடுத்து படித்துப் பார்த்திருக்கிறேன். சில கடிதங்களின் வார்த்தை பிரயோகங்கள் இன்றும் என்னை ஆச்சர்யப் பட வைக்கின்றன.

அவ்வ போது இந்த கடிதங்களே எனக்கு உற்சாகம் அளிக்கும் டானிக்.

நமது அடுத்த தலை முறைக்கு நாம் கடிதம் எழுதுவதை ஒரு கலையாக தெரிவிக்கப் போகிறோமா அல்லது அதையும் ஸ்கேன் செய்த பதிவாக மையிலில் காட்ட போகிறோமா ?

"வீடற்ற குழந்தைகளுக்கு கடிதம் எழுதுதல் " என்ற தலைப்பில் தமிழ் நாட்டில் இருந்து எழுதப் பட்ட ஒரு கடிதம் முதல் பரிசை தட்டி சென்றதாக நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது தமிழாசிரியார் வகுப்பில் அறிவித்து அதே தலைப்பில் ஒவ்வொருவரும் ஒரு கடிதம் எழுதி அடுத்த நாள் எடுத்து வர வேண்டும் என்று சொல்லிவிட்டார்.

என்னால் ஒன்றுமே எழுத முடிய வில்லை. வீடற்ற குழந்தைகளுக்கு என்ன எழுதுவது ?

என் வீட்டுக்கு வாருங்கள் என்று அழைப்பதா?

ஏன் வீடு இல்லை என்று விவரம் கேட்பதா ?

கவலைப் பட வேண்டாம் என்று ஆறுதல் சொல்வதா ?

ஒரு வித குழப்பத்தில் ஆழ்ந்து என்னவு எழுதி கொடுத்து விட்டோம். நல்ல வேலையாக பரிசு எதுவும் அறிவிக்க வில்லை.

கடிதங்களின் தொகுப்பு ஓர் இலக்கிய வடிவமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு பலரின் கடிதங்கள் ஒரு தொகுப்பு நூலாக வெளிவந்துள்ளன.

கி. ரா வின் கடிதங்களில் ஓர் யிரோட்டம் உள்ளது. வண்ணதாசன் கடிதங்காளில் நெகிழ வைக்கும் விஷயங்கள் உள்ளன.

கடிதம் எழுதுவதற்கு உபயோக படுத்தப் படும் காகிதங்களும் சில வற்றை தெரிவிக்கின்றன. போஸ்ட் கார்டில் வருவது சாதாரண செய்தி, மங்கள செய்தி, அறிவிப்பு, தகவல் போன்றவை. இன்லாந்து லெட்டரில் சில கூடுதல் செய்திகள். சிற்சில ரகசியங்கள்.

கவர் பூட்டு ஒட்டிய கடிதங்களுடன் பரிசுகளும் வரலாம். குட்டி போடும் என்று நினைத்து நான் பலருக்கும் மயிர் தோகை அனுப்பியுள்ளேன்.

இன்று நினைத்தாலும் அந்த கடிதங்கள் ஒரு பரவசத்தை அளிக்கின்றன.

எம் ஜி ஆர்


எம் ஜி ஆர் - மருதூர் கோபால ராமச்சந்திரன் - ஒரு நடிகர், முதலமைச்சர் , பரோபகாரி, உதவும் உள்ளம் படைத்தவர் என பன்முகம் கொண்டவராக ஆரியப் பட்டவர் என்றாலும் அவரது வெற்றியின் அடிநாதம் அவர் ஒரு மக்கள் தலைவர் என்பதே ஆகும்.

உடல் நிலை சரியில்லாமல் அமெரிக்காவில் மருத்துவமனையில் அவர் படுத்த படுக்கையாக இருந்த போது, அவர் உடனடியாக நலம் பெற்று திரும்ப வேண்டும் என்று தமிழகத்தின் பெருவாரியான மக்கள் மனப் பூர்வமாக விரும்பினார்கள் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

அந்த நாட்களில் தமிழகம் முழுவதும் மூன்று பாடல்கள் பட்டி தொட்டி எல்லாம் திரும்ப திரும்ப ஒலி பரப் பப்பட்டதாக அறிந்திருக்கிறேன்.

" நீங்க நல்ல இருக்கோணும் நாடு முன்னேற -

இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற "


"வாங்கையா வாத்தியாரையா "


"ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன் - இந்த

ஓருயிரை நீ வாழ வைக்க இன்று உன்னிடம் கையேந்தினேன் "


இன்று கேட்டாலும் இந்த மூன்று பாடல்களும் சாதாரண எம் ஜி ஆர் ரசிகனின் மனதில் அலை அலையாக உணர்சிகளை எழுப்பும் தன்மை கொண்டவை.


இந்த மூன்று பாடல்களையும் இன்று வேறு வேறு சேனல்களில் பார்த்தேன்.