வீடு மாற்றுதல் என்ற நிகழ்வு கடந்த பாத்து ஆண்டுகளாக இல்லை. நண்பர்களுடன் தங்கியிருந்த அறையே வீடாக மாறியதால் அதிலேயே வசிப்பிடம் தொடர்கிறது. ஆனால் திடீரென்று வாடகை மூன்று முறை அதிகரிக்கப் பட்டது. மூன்றாவது முறை மிக அதிகமாக ஏற்றப் பட்டதால், அதே வீட்டின் பின்புறத்திற்கு மாறிவிட விருப்பம் தெரிவித்து அதன்படி நேற்று பால் காய்ச்சி புதிய வீடிற்கு குடி புகுந்தாகி விட்டது.
பொருளாதார பற்றாக் குறையே வீடு மாறுதலுக்கு முதல் காரணமாகும். மேலும் அக்கம் பக்கமுள்ளவர்களும் இரண்டு பேருக்கு இந்த வீடு அதிகம் என்று பல முறை சொல்லி விட்டார்கள் என்பதும் என் மனைவியின் வாதம். புதிய வீடு முந்தைய வீட்டின் அளவில் சரி பாதியளவே ஆகும். ஆனாலும் போதுமானதாகவே இருக்கிறது. புத்தகங்களை அடுக்குவது தவிர வேறு ஒன்றும் சிரமங்கள் இல்லை. ஆயிரம் ருபாய் சேமிப்பும் வங்கி கடனை செலுத்த உதவும்.
முதல் முதலாக தேவகோட்டை செப்பவயலார் தெருவில் இரண்டு மூன்று வீடுகளில் மேரி மேரி இருந்தது நினைவில் உள்ளது. அண்ணாமலை அய்யா வீடு, அன்னபூரணி ஆச்சி வீடு, இன்னொரு வீடு.
சந்திரசேகர் மற்றும் பாப்பு ஆகியோர் பக்கத்துக்கு வீட்டில் இருந்த என் வயதுள்ள குழந்தைகள். அங்கிருந்து வீரபண்டியபுரம் நடுதெருவுக்கு வீடு மாற்றம் செய்யப் பட்டது. பின்பு, தேவி பவனம். இப்போது மின் வாரிய சாலை.
பெரம்பலூரில் ரூம் ரூமாக மாறியதில் நினைவுகள் ஒன்றும் இல்லை.
No comments:
Post a Comment