Monday, October 26, 2009

அஞ்சல் காரன்



குளிர்பதன கூடாரம்


ஆகிவிட்டது அஞ்சலகம்


அதிகாரிகள் அனுபவிப்பர்


அஞ்சல்காரன் என்செய்ய ?


மூடிவைத்த உறைகளுக்குள்


பிறரறியா ஆச்சர்யங்கள்


சுமந்து சென்றிடுவான்


சுற்றி அலைந்திடுவான்



வண்ணமய உறைகளில்


வாழ்த்து பரிமாறல்


மஞ்சள் தாங்கிய அட்டையில்


மங்கள செய்திகள்


கருமை போர்த்திய கடிதத்தின்


இழப்பு ஸோகம்


எதுவும் குறுக்கிடுவதில்லை


இவனின் பணிகளில்


வேலை வரம்தேடும்


வீர இளவல்களுக்கு


நாளை வருமென்ற


நற்சேதி சொல்லிடுவான்


கதவிடுக்கில் காத்திருக்கும்


கனிமொழி மாதருக்கு


கணவர் வரும் நாள் சொல்லும்


கடுதாசி தந்திடுவான்


திசை அறியா நாட்டில்


தினம் தேய்ந்து


மகன் அனுப்பும்


மணி ஆர்டர் பணத்தை


குறையாமல் தந்திடுவான்


குடும்பத்தின் உணர்ச்சிகளில்


உரிமையுடன் பங்கேடுப்பான்.


ஊருக்கெல்லாம் சேதிசொல்லும்


இவன் சோகம்


சொல்வதற்கு யாருக்கிவன் கடிதம் எழுத ?



- கதா


Saturday, October 24, 2009

இரவில் ஆட்டோ ஓட்டுபவன்


ஆளற்ற நிலையத்தில்

அடங்கிய ஒசைகளிடையே

களைத்து வந்திறங்கும் பயணியை

கனிவாக எதிர் கொள்ளும்

தூக்கமற்ற உழைப்பாளி .

கூடுதலாய் இவன் கேட்கும்

கூலியை நிராகரிப்பார்

கூடாத வேளையிலும்

பயணம் விழைவோர் .

இணக்கமான கட்டணத்திற்கு

இறங்கி வந்தாலும்

சொன்ன இடமடைந்ததும்

சற்று தூரம் போகணும் என்பார்.

என்னை விலை ஏற்றம் என

எடுத்துக் கூறினாலும்

ஏறி அமர்பவர்கள்

ஏற்பதில்லை எவன் வாதம்.

சவாரி முடிந்திவன்

சலித்து திரும்புகையில்

நல்ல சவாரியை

அடுத்த வண்டி ஏற்றிருக்கும்.

ஆளில்லா நாட்களில்

அழுகிறான் ஆற்றமையால்

ஆண்டவனை நினைப்பதில்லை

அதிகாரியால் பயம்கொண்டு.

- கதா

கூர்கா



ஒருபோதும் வருவதில்லை

என்பார் பலர்

ஓரிருநாள் பார்த்ததாக

கூறுவார் சிலர்

பின்னிரவில் தினமும் வருவதாக அவன்

வாதங்கள் புரிவதில்லை

இச்சை அகற்றிவிட்டு

இரவில் அலைந்தாலும்

பிச்சை கேட்பதில்லை

காவியுடை காவலன்.

உறக்கம் நன்று என்போரின்

நிம்மதிக்கு உறுதுணையாக

சீழ்கை ஒலியுடன் சுற்றி வருவான்

மனிதர்க்கு மட்டுமல்ல

நாய்களுக்கும் நண்பனிவன்

இரவு நட்பிற்கு

இறுக்கம் அதிகம் தான்

பின்னகர்ந்து செலுத்தும்

வணக்கம் புதிதல்ல
உடல் வளைந்து

பணம் பெற்றாலும்

கம்பீரம் குரயமை புதிது.

- கத

Thursday, October 22, 2009

மீன்காரி




நகரத்தின் இல்லங்களில்
ஞாயிறன்று வழக்கமாக
கவிச்சி சுவைக்கப்படும்
காலமும் நடப்பதிது.

கிடைக்கின்ற மீன்களை விற்பவளைவிட
கேட்கின்ற மீன்கள் வைத்திருப்பவள் காசு சேர்ப்பாள்.

உயிரோடு உள்ளதென்றும்,
இப்போதுதான் வந்ததென்றும்,
சுவையான வகையென்றும்,
சுலபமாக கிடைக்காதென்றும்,

செத்த மீனுக்கு
உயிரூட்டும் இவள் நாக்கு .

வண்ண மீன்களில் நாட்டமில்லை இவளுக்கு

பருத்த மீன்களால் பணப்பை நிரம்புகிறது

வந்து செல்லும் கூட்டத்தை

வருந்தி இவள் அழைக்கும்

வார்த்தை ஜாலங்களில்

வாய்மைக்கு இடமில்லை.

கூவி அழைத்தாலும்

கூப்பிட்டு பார்த்தாலும்

கடையில் கொட்டியிருக்கும்

மீன்களால் லாபமில்லை

சுவையின் கிறக்கத்தில்

சுழன்றடிக்கும் நாக்குகளின்

சூட்சுமத்தால் விற்பனை உயர்கிறது.



- Gadha

Tuesday, October 13, 2009

இரு valaithalangal

தமிழ் வலைத்தளத்தில் பதிவு எழுதி பல நாட்கள் ஆகி விட்டன. ப்ரீ ஓபன் டயரி வலைத்தளத்தில் தொடர்ந்து பதிவுகள் மேற்கொண்டு வருவதால் விடுபட்டுவிட்டது. இனி பதிவுகள் தொடரும்.