Thursday, October 22, 2009

மீன்காரி




நகரத்தின் இல்லங்களில்
ஞாயிறன்று வழக்கமாக
கவிச்சி சுவைக்கப்படும்
காலமும் நடப்பதிது.

கிடைக்கின்ற மீன்களை விற்பவளைவிட
கேட்கின்ற மீன்கள் வைத்திருப்பவள் காசு சேர்ப்பாள்.

உயிரோடு உள்ளதென்றும்,
இப்போதுதான் வந்ததென்றும்,
சுவையான வகையென்றும்,
சுலபமாக கிடைக்காதென்றும்,

செத்த மீனுக்கு
உயிரூட்டும் இவள் நாக்கு .

வண்ண மீன்களில் நாட்டமில்லை இவளுக்கு

பருத்த மீன்களால் பணப்பை நிரம்புகிறது

வந்து செல்லும் கூட்டத்தை

வருந்தி இவள் அழைக்கும்

வார்த்தை ஜாலங்களில்

வாய்மைக்கு இடமில்லை.

கூவி அழைத்தாலும்

கூப்பிட்டு பார்த்தாலும்

கடையில் கொட்டியிருக்கும்

மீன்களால் லாபமில்லை

சுவையின் கிறக்கத்தில்

சுழன்றடிக்கும் நாக்குகளின்

சூட்சுமத்தால் விற்பனை உயர்கிறது.



- Gadha

No comments:

Post a Comment