
கருக்கலைப்பு - இது ஒரு சொல்லத்தகாத சொல்லாகவும், ரகசியமாக மறைமுகமாக மட்டுமே பயன் படுத்தத் தக்கதாகவும் இருந்து வந்தது. அமெரிக்காவில் வயதுக்கு வந்த மகள் வெளியே செல்லும் பொது " மறக்காமல் காண்டம் எடுத்துக் கொண்டாயா ?" என்று தாய் மார்கள் கேட்பது வழக்கம் என்று கேள்விப்பட்டு அந்த வகை நாகரீகத்தின் வளர்ச்சி பல அதிர்வுகளை ஏற்படுதியதுண்டு.
எண்பதுகளில் குடும்ப கட்டுப் பாடு சிகிச்சை எளிமை படுத்தப்பட்டு அதனை எய்துவதற்கு குறியீடு நிர்ணயிக்கப் பட்ட பின்னர் பிறப்பை குறைப்பது மக்கள் தொகையை கட்டுப் படுத்தும் ஒரு காரணியாக கருதப் பட்டது. மேலும் குழந்தைகளுக்கிடையே போதிய இடைவெளி இருப்பது அவசியம் என்றும், திருமணமான உடன் குழந்தை பெறுவது அவசியமில்லை என்றும் சில சொல்லாடல்கள் முன்வைக்கப் பட்டன. அவற்றில் பெரும்பாலானவை ஏற்றுக் கொள்ளப் பட்டன.
அரசாங்கமும் அதன் வழியில் ஊடகங்களின் வாயிலாக விளம்பரங்களும், ஆங்காங்கே சுவர் விளம்பரங்களும் செய்து உரிய செய்தி அணைத்து மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதில் பெரும் கவனம் எடுத்துக் கொண்டது. திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் சுமார் அறுநூற்றைம்பது கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப் பட்டது என்று காலை ஆறு முப்பது மாநில செய்திகளில் வசித்தார்கள். எனினும் ஒரே நாளில் செய்யப்பட்ட உலக சாதனையை விட இந்த எண்ணிக்கை சற்றே குறைவானது என்றும் தெரிவிக்கப் பட்டது.
" முதல் குழந்தையை தாமத படுத்துங்கள்"
" இரண்டாவது குழந்தைக்கு இடைவெளி தாருங்கள்"
" மூன்றாவது குழந்தையுடன் முற்றுபுள்ளி வையுங்கள்"
இது அந்த காலத்தின் அரசு வேண்டுகோள்.
இதுவே பின்பு காலத்தின் கட்டாயமாக
" நாம் இருவர் நமக்கு இருவர் " என்று மாறியது.
" இரண்டே பெறுக இனிதே வாழ்க" என்பது இன்னொரு ஸ்லோகன் .
படிப்படியாக மாறி இதுவே,
" ஒன்றே பெறுக, ஒளிமயமாக வாழ்க " என்று ஆனது.
இதை விட குறைவான திட்டமிடல் இருக்க இயலாது என்ற நிலையில் அறைகூவல்கள் இத்துடன் நின்று விட்டது.
" நாமே இருவர் , நமக்கேன் இன்னொருவர் " என்ற ஸ்லோகன் வரும் வரும் என்று எதிர் பார்த்து இன்று வரை வரவில்லை.
இந்திய துணை கண்டத்தின் பலமே எங்கும் வியாபித்திருக்கும் மக்கள் மக்கள் மக்கள் திரளே ஆகும் .
No comments:
Post a Comment