
எம் ஜி ஆர் - மருதூர் கோபால ராமச்சந்திரன் - ஒரு நடிகர், முதலமைச்சர் , பரோபகாரி, உதவும் உள்ளம் படைத்தவர் என பன்முகம் கொண்டவராக ஆரியப் பட்டவர் என்றாலும் அவரது வெற்றியின் அடிநாதம் அவர் ஒரு மக்கள் தலைவர் என்பதே ஆகும்.
உடல் நிலை சரியில்லாமல் அமெரிக்காவில் மருத்துவமனையில் அவர் படுத்த படுக்கையாக இருந்த போது, அவர் உடனடியாக நலம் பெற்று திரும்ப வேண்டும் என்று தமிழகத்தின் பெருவாரியான மக்கள் மனப் பூர்வமாக விரும்பினார்கள் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.
அந்த நாட்களில் தமிழகம் முழுவதும் மூன்று பாடல்கள் பட்டி தொட்டி எல்லாம் திரும்ப திரும்ப ஒலி பரப் பப்பட்டதாக அறிந்திருக்கிறேன்.
" நீங்க நல்ல இருக்கோணும் நாடு முன்னேற -
இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற "
"வாங்கையா வாத்தியாரையா "
"ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன் - இந்த
ஓருயிரை நீ வாழ வைக்க இன்று உன்னிடம் கையேந்தினேன் "
இன்று கேட்டாலும் இந்த மூன்று பாடல்களும் சாதாரண எம் ஜி ஆர் ரசிகனின் மனதில் அலை அலையாக உணர்சிகளை எழுப்பும் தன்மை கொண்டவை.
இந்த மூன்று பாடல்களையும் இன்று வேறு வேறு சேனல்களில் பார்த்தேன்.
No comments:
Post a Comment