Tuesday, February 9, 2010

கடிதம்


கடிதம் எழுதுதல் என்ற கலை இணையம் மற்றும் கை பேசியால் மறக்கடிக்கப் படக் கூடிய சூழல் உருவாகியுள்ளது.

முன்பெல்லாம் சில பையன்கள் விடுதியில் தங்கி படிப்பார்கள். வீட்டிலிருந்து வரும் கடிதத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் சுகத்தை அவர்கள் அபரிமிதமாக அனுபவித்து விட்டவர்கள்.

நானும் வேறொரு ஊரில் தங்கி படித்த போதுஅடிக்கடி கடிதங்கள் எழுதுவேன்.

கண்ணன்

சிவா

அப்பா & அம்மா

சுபாஷ்

சரவணன்

போன்றவர்களுடன் தொடர்ந்த கடித தொடர்பு இருந்தது.

என் அப்பாவின் கடிதங்களில் பெரிய பட்டயடிக்கும் முனை கொண்ட பேனாவினால் கருப்பு மையினால் சீரான இடைவெளி விட்டு எழுதப் பட்ட குண்டு குண்டு எழுத்துக் களைக்கொண்ட வரிகள் பாசத்தையும் அன்பையும் பொழிந்து தள்ளியிருக்கும்.

என் நண்பர்களின் கடிதங்களை வரிசை படுத்தி தனியாக நீண்ட காலம் வைத்திருந்தேன். இரண்டு முறை வீடு மாற்றிய போது பல கடித கற்றைகள் இடம் மாறி தொலைந்து விட்டன. இருப்பினும் பல கடிதங்கள் இன்னும் என்னிடம் பத்திரமாக உள்ளன.

பல முறை ஓய்வாக இருக்கும் போது அவற்றில் பலவற்றை எடுத்து படித்துப் பார்த்திருக்கிறேன். சில கடிதங்களின் வார்த்தை பிரயோகங்கள் இன்றும் என்னை ஆச்சர்யப் பட வைக்கின்றன.

அவ்வ போது இந்த கடிதங்களே எனக்கு உற்சாகம் அளிக்கும் டானிக்.

நமது அடுத்த தலை முறைக்கு நாம் கடிதம் எழுதுவதை ஒரு கலையாக தெரிவிக்கப் போகிறோமா அல்லது அதையும் ஸ்கேன் செய்த பதிவாக மையிலில் காட்ட போகிறோமா ?

"வீடற்ற குழந்தைகளுக்கு கடிதம் எழுதுதல் " என்ற தலைப்பில் தமிழ் நாட்டில் இருந்து எழுதப் பட்ட ஒரு கடிதம் முதல் பரிசை தட்டி சென்றதாக நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது தமிழாசிரியார் வகுப்பில் அறிவித்து அதே தலைப்பில் ஒவ்வொருவரும் ஒரு கடிதம் எழுதி அடுத்த நாள் எடுத்து வர வேண்டும் என்று சொல்லிவிட்டார்.

என்னால் ஒன்றுமே எழுத முடிய வில்லை. வீடற்ற குழந்தைகளுக்கு என்ன எழுதுவது ?

என் வீட்டுக்கு வாருங்கள் என்று அழைப்பதா?

ஏன் வீடு இல்லை என்று விவரம் கேட்பதா ?

கவலைப் பட வேண்டாம் என்று ஆறுதல் சொல்வதா ?

ஒரு வித குழப்பத்தில் ஆழ்ந்து என்னவு எழுதி கொடுத்து விட்டோம். நல்ல வேலையாக பரிசு எதுவும் அறிவிக்க வில்லை.

கடிதங்களின் தொகுப்பு ஓர் இலக்கிய வடிவமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு பலரின் கடிதங்கள் ஒரு தொகுப்பு நூலாக வெளிவந்துள்ளன.

கி. ரா வின் கடிதங்களில் ஓர் யிரோட்டம் உள்ளது. வண்ணதாசன் கடிதங்காளில் நெகிழ வைக்கும் விஷயங்கள் உள்ளன.

கடிதம் எழுதுவதற்கு உபயோக படுத்தப் படும் காகிதங்களும் சில வற்றை தெரிவிக்கின்றன. போஸ்ட் கார்டில் வருவது சாதாரண செய்தி, மங்கள செய்தி, அறிவிப்பு, தகவல் போன்றவை. இன்லாந்து லெட்டரில் சில கூடுதல் செய்திகள். சிற்சில ரகசியங்கள்.

கவர் பூட்டு ஒட்டிய கடிதங்களுடன் பரிசுகளும் வரலாம். குட்டி போடும் என்று நினைத்து நான் பலருக்கும் மயிர் தோகை அனுப்பியுள்ளேன்.

இன்று நினைத்தாலும் அந்த கடிதங்கள் ஒரு பரவசத்தை அளிக்கின்றன.

No comments:

Post a Comment