
குழந்தைகளின் உலகம் மிகவும் நுட்பமும் அழமும் உடையது. எவ்வளவு முயன்றாலும் நம்மால் புரிந்து கொள்ள முடியாதது. அவர்களின் எண்ணங்கள் மற்றும் செயல்களை நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது. அதே போல் பெரியவர்களின் உலகம் குழந்தைகளுக்கு புரிவதில்லை. ஆனால் அதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. நினைத்து பார்த்தால் நமக்கு கவலைப்படுவதிலேயே நேரம் கழிந்து விடுவது புலனாகும். ஆனால் குழந்தைகளுக்கு ஆனந்தப்படுவதற்கே நேரம் போதவில்லை. ஆறு மதங்கள் வரை குழந்தைக்கு யாரையும் அடையாளம் தெரியாது என்று சொல்கிறார்கள்( அம்மாவைத்தவிர). ஆனால் பல குழந்தைகள் பலரையும் அடையாளம் கண்டுகொள்கிறார்கள். எனது குழந்தை கீழ்கண்டவர்களை அடையாளம் கண்டு கொள்கிறான்.
௧. கீழ் வீட்டு மஞ்சு.
௨.மஞ்சுவின் கார்.
௩.பக்கத்து வீட்டு வெள்ளை நாய்.
௪.துணி துவைக்க ஊற வைக்கும் சிவப்பு பிளாஸ்டிக் பாத்திரம்.
௫.மாடியில் கட்டப் பட்டுள்ள கொடிகள்.
௬. பால்கார பையன்.
௭. தீபிகா
௮. தீபக்
௯. பாலசிங்கம்
௧0.கபி
௧௧. சூர்யா
௧௨.பாரதி
௧௩. தரைவிரிப்பு கலர்
௧௪.சுவரில் ஒட்டியிருக்கும் புலி, மான் படங்கள்.
௧௫. டிவி ரிமோட்
௧௬. தண்ணீர் வைக்கும் மண் பாத்திரம்.
௧௭. அவருக்காக வாங்கப்பட்டு உடைந்து போயுள்ள பொம்மைகள்.
பட்டியல் இன்னும் நீள்கிறது. ஆனால் மின் துண்டிப்பு இந்த பதிவுக்கு தற்காலிக தடை போட்டுவிட்டது. நன்றி.
No comments:
Post a Comment