ஒருமுறை அலுவலக நண்பர் சிற்றரசு தாம் புவனேஸ்வரில் இருந்ததாக சொல்லியிருந்தார். எனவே, ஒரிசாவில் மூன்று நாட்களும், வங்கத்தில் நான்கு நாட்களும் என முடிவு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் கீழ்க்கண்ட பயண திட்டம் தயார் செய்யப்பட்டது.
Sl.No | Date | Details |
1 | 14.05.2010 5.00 PM | Start from ARIYALUR |
2 | 15.05.2010 7.00 PM | Arrival BBS |
3 | 16.05.2010 | NANDHANKANAN, DHAULI etc. |
4 | 17.05.2010 Before 6.00 AM | Proceed to KONARK |
5 | 17.05.2010 Night | Arrival to PURI and Halt |
6 | 18.05.2010 1.00 PM | Start to BBS by BUS Visit Sakshi Gopal and Pippli |
7 | 18.05.2010 Night | Arrival to BBS |
8 | 19.05.2010 | BBS Local temples |
9 | 19.05.2010 22.45 PM or 23.30 PM | Start to Karaghpur by Utkal Express (or) Purushotham Express |
10 | 20.05.2010 Before 7.00 AM | Start to BISHNUPUR by BUS from Kharagpur |
11 | 20.05.2010 | BISHNUPUR – full day |
12 | 21.05.2010 Before 6.00 AM | Proceed to Jayarambhatti by Bus (43 KM) To Kamarpukkur by BUS – 5 Km Night proceed to Kolkatta (Upto Tarakeshwar by Bus and by EMU to |
22.05.2010 | RESERVE TICKETS IN TATKAL QUOTA TO CHENNAI | |
13 | 22.05.2010 6.00 AM | Dhakshineswar and Belur Math |
14 | 23.05.2010 | ISKCON MAYAPUR |
15 | 24.05.2010 | Visit Kalighat by Metro train. Enjoy Dram and Hand Rickshaw rides. Proceed to Chennai by one of the trains |
16 | 25.05.2010 | Journey towards Chennai |
17. | 26.05.2010 04.15 | Arrival to Chennai Central |
இணையத்தளத்தில் ஒரிசாவைப்பற்றி நிறைய தகவல்கள் சேகரித்தேன். தங்குமிடம் நண்பர் நாயக் அவர்கள் ஏற்பாடு செய்வர் என்று அறிந்ததும் பெரிய சுமை விட்டது போல் இருந்தது. நண்பர் சிற்றரசு ஒரிசாவில் சுற்றி பார்க்க வாகனமும் நண்பர் நாயக் அவர்களால் ஏற்பாடு செய்ய முடியும் என்று சொல்லியிருந்தார். சென்ற செப்டம்பர் மாதம் (2009) சென்னை சென்றிருந்த போது கோட்டை மயுசியத்தில் வாங்கிய புத்தகங்களை படித்து ஒரிஸ்ஸாவின் கோவில்களை பற்றிய தகவல்களை அறிந்து கொண்டேன். மேலும் இணைய தளத்தில் பலர் எழுதியிருந்த பயணக் குறிப்புகளும், அவர்களின் அனுபவங்களும் ஒரு கிளர்ச்சியை கிண்டி விட்டிருந்தன. ஒரிசா கோவில்களின் பூசாரிகளை பற்றிய மோசமான விமரிசனங்களே இணையத்தில் எங்கும் கொட்டி கிடந்தன. எனக்கு அவற்றை காட்டிலும் ஒரிஸ்ஸாவின் கிராமப் புறங்களை காணவே ஆவல் நிறைந்திருந்தது. அன்பே சிவம் திரைப்படத்தில் கமல ஹாசன் ஒரு வசனம் சொல்வார் " அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சர்யங்கள் இவ்வுலகில் ஏராளம் ". புதிய ஆச்சர்யங்களை எதிர்கொள்ள ஒரு மாதமாக தயாராகிக் கொண்டிருந்தேன். ஒரிசா வரைபடம், புரி, புவனேஸ்வரம் வரைபடங்கள், ஒரிசா சுற்றுலா தளங்களை பற்றிய செய்திகள் போன்ற பல தகவல்கள் பதிவிறக்கம் செய்தேன். சில வரைபடங்களை கடையில் வாங்கினேன். இந்த தேடலில் பல புதிய இணையதளங்கள் அவ்வப்போது குறுக்கிட்டன. அவற்றில் சில நுண்ணிய விவரங்களும் பயனுள்ள குறிப்புகளும் இருந்தன. ஒன்று விடாமல் குறிப்பெடுத்துக் கொண்டேன்.
அன்று வெள்ளி கிழமை. மாலை 3.15 க்கு பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் அரியலூர் செல்லும் பேருந்தில் கால் வைத்ததிலிருந்து பயணம் தொடங்கியது.
No comments:
Post a Comment