Wednesday, July 1, 2009

மாறுபட்ட சிந்தனை


வெற்றியாளர்கள் மாறுபட்டு சிந்திக்கிறார்கள் என்பது புகழ் பெற்ற வாக்கியம். சிறிய மாற்றங்கள் கூட பெரிய விளைவை ஏற்படுத்தும்.

ஒரு கிராமத்தில் ஒரு சிறுவன் இருந்தான். அவனை எல்லோரும் முட்டாள் என்று அழைத்தார்கள். இரு கைகளிலும் நாணயங்களை வைத்து எது வேண்டுமோ எடுத்துக்கொள் என்றால் அவன் மதிப்பு குறைவான காசையே எடுத்துக் கொள்வான். உடனே அனைவரும் அவனை முட்டாள் என்று சொல்லி சிரிப்பார்கள். அவன் அதை பற்றி கவலை படுவதில்லை. இதை பார்த்த ஒருவர் அவனிடம் " நீ ஏனப்பா குறைவான மதிப்புடைய காசை எடுக்கிறாய் ? அதனால் உன்னை எல்லோரும் முட்டாள் என்று உன்னை பழிக்கிறார்கள். எனவே இனிமேல் யாராவது காசு எடுக்க சொன்னால் நீ அதிக மதிப்புடைய காசை எடுத்துக் கொள். " என்று கூறினார். பையன் அலட்டி கொள்ளாமல் கூறினான். " ஐயா , நீங்கள் சொல்வது போல அதிக மதிப்புடைய காசை எடுக்கலாம். ஆனால் அதன் பின்னால் எந்த விளையாட்டை யாரும் தொடர மாட்டார்களே ? "

இப்போது தெரிகிறதா யார் முட்டாள் என்று.

No comments:

Post a Comment