
குளிர்பதன கூடாரம்
ஆகிவிட்டது அஞ்சலகம்
அதிகாரிகள் அனுபவிப்பர்
அஞ்சல்காரன் என்செய்ய ?
மூடிவைத்த உறைகளுக்குள்
பிறரறியா ஆச்சர்யங்கள்
சுமந்து சென்றிடுவான்
சுற்றி அலைந்திடுவான்
வண்ணமய உறைகளில்
வாழ்த்து பரிமாறல்
மஞ்சள் தாங்கிய அட்டையில்
மங்கள செய்திகள்
கருமை போர்த்திய கடிதத்தின்
இழப்பு ஸோகம்
எதுவும் குறுக்கிடுவதில்லை
இவனின் பணிகளில்
வேலை வரம்தேடும்
வீர இளவல்களுக்கு
நாளை வருமென்ற
நற்சேதி சொல்லிடுவான்
கதவிடுக்கில் காத்திருக்கும்
கனிமொழி மாதருக்கு
கணவர் வரும் நாள் சொல்லும்
கடுதாசி தந்திடுவான்
திசை அறியா நாட்டில்
தினம் தேய்ந்து
மகன் அனுப்பும்
மணி ஆர்டர் பணத்தை
குறையாமல் தந்திடுவான்
குடும்பத்தின் உணர்ச்சிகளில்
உரிமையுடன் பங்கேடுப்பான்.
ஊருக்கெல்லாம் சேதிசொல்லும்
இவன் சோகம்
சொல்வதற்கு யாருக்கிவன் கடிதம் எழுத ?
- கதா
ada kadha kavithaiyum ezhuthivIrkaLA?
ReplyDeleteyes. konjam. konjam..
ReplyDelete